நீலகிரியில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரைப்பந்தயம்..!

'நீலகிரீஸ்' தங்க கோப்பை போட்டி, ஜூன் 2-ம் தேதி நடக்கிறது. மொத்தம், 5.35 கோடி ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நுழைவு கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்கப்படும்.


கோவை: ஊட்டி நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், குதிரைப்பந்தயம் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு, 135-வது குதிரைப்பந்தயம், (நாளை) 14-ம் தேதி துவங்கி, ஜூன் 18-வரை நடக்கிறது.

இதில், 600-குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மெட்ராஸ் குதிரைப்பந்தய செயலாளர் நிர்மல் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊட்டியில் கொரோனா தொற்று காரணமாக, இரு ஆண்டுகளாகக் குதிரைப்பந்தயம் நடக்காத நிலையில், நடப்பாண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி போட்டிகள் நடத்தப்படும். ஒரு பெண் பயிற்சியாளர் உட்பட, 30-பயிற்சியாளர்கள் மற்றும் 30-ஜாக்கிகள் பங்கேற்கின்றனர்.

முக்கிய போட்டியான, 'நீலகிரீஸ்' தங்க கோப்பை போட்டி, ஜூன் 2-ம் தேதி நடக்கிறது. மொத்தம், 5.35 கோடி ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நுழைவு கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...