கோவை உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் கார் கவிழ்ந்து விபத்து - பீஸ்ட் படம் பார்க்க சென்ற இளைஞர் பலி - 3 பேர் படுகாயம்..!

இதையடுத்து பொக்லின் மூலம் சாலையில் கவிழ்ந்த கார் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாகப் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.



கோவை நஞ்சுண்டாபுரம் சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் கெளசிக் (21) கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனியாக தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இவரது நண்பர்கள் பிரித்திவி,கனிஷ்கா, நிவேதா இவர்கள் 4 பேரும் இன்று காலை சுமார் 3 மணியளவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் முதல் காட்சியைபார்ப்பதற்காக, தங்களது காரில் வந்துள்ளனர்.

அப்போது கார் உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி, சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கெளசிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



படுகாயம் அடைந்த மற்ற 3 பேரையும், அங்கு வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கெளசிக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதையடுத்து பொக்லின் மூலம் சாலையில் கவிழ்ந்த கார் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாகப் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...