கிணத்துக்கடவில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் தேவராயபுரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மீது மரங்கள் விழுந்து சேதம். 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து பாதிப்பு.
கோவை: கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில் மாலை கருமேகங்கள் சூழ இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது இதனிடையே பொள்ளாச்சி அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மீது தென்னை மரங்கள் விழுந்து மேற்கூரைகள் சேதமடைந்தது, மேலும் பலத்த காற்று வீசியதால் அடியோடு மேற்கூரை காற்றில் பறந்தது.
மேலும் தென்னை தோப்புகளிலிருந்த 50-க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தும் பாதியளவு முறிந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகளும், மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.