புதிய கவுன்சிலர்களுக்கு 'அடுத்த கூட்டம் முதல் பேச வாய்ப்பு தரப்படும்': கோவை மேயர் உறுதி..!

மாநகராட்சி முதல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் புதிய கவுன்சிலர்களுக்கு அடுத்த கூட்டம் முதல் பேச வாய்ப்பு தரப்படும் என்று கோவை மேயர் உறுதியளித்தார்.


கோவை:கோவை மாநகராட்சியில் நேற்று முதல் கூட்டம் என்பதால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பலரும் போட்டி போட்டு பேசினர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மன்றத்தின் முதல் சாதாரண கூட்டம், நேற்று மேயர் தலைமையில் நடந்தது.

கூட்டம் தொடங்கியதும் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, மத்திய மண்டல தலைவர் மீனா, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் ஆகியோர், கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.

முதல் கூட்டம் என்பதால், பல கவுன்சிலர்களும் ஆர்வமாகப் பேச முற்பட்டனர். ஆனால், அவர்களுக்குப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே பேசிய சிலரே, மீண்டும் மீண்டும் பேசுவதும் நடந்தது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் கொந்தளித்தனர்.

அவர்களை கமிஷனரும், மேயரும் சமாதானப்படுத்தினர். 'அடுத்த கூட்டம் முதல் அனைவருக்கும் பேச வாய்ப்பு தரப்படும்' என்று மேயர் கூறினார். 'கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மனு கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் பேச அழைக்கிறோம்' என்றார் கமிஷனர்.

கூட்டத்தில், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, வரி விதிப்புக்குழு தலைவர் முபஷீரா, கல்விக்குழு தலைவர் மாலதி, கவுன்சிலர்கள் அப்துல் காதர், மல்லிகா, சர்மிளா சுரேஷ்நாராயணன், அங்குலட்சுமி உள்ளிட்ட பலரும் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...