கோவையில் சொத்து வரி தீர்மான நகலை கிழித்தெறிந்த அதிமுக கவுன்சிலர் சஸ்பென்ட் - மேயர் அதிரடி உத்தரவு

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி தீர்மான நகலை கிழித்தெறிந்த 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன், அடுத்து வரும் இரண்டு மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி தீர்மான நகலை கிழித்தெறிந்த 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன், அடுத்து வரும் இரண்டு மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மூன்று அதிமுக உறுப்பினர்கள், சொத்து வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் எனவும் இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், என்று எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து, மாமன்ற வளாகத்தில் சொத்துவரி தீர்மான நகலை 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன் கிழித்து எறிந்து கண்டனத்தை தெரிவித்தார். அவரது செயலுக்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர், சொத்துவரி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்றத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், மாமன்ற கூட்டம் வளாகத்தில் சொத்துவரி தீர்மான நகலை கிழித்து ரகளையில் ஈடுபட்ட 47வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன் அடுத்த இரண்டு கூட்டங்களில் பங்கேற்க, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உத்திரவிட்டார்.

கோவை மாநகராட்சியின் முதல் சாதாரண கூட்டத்திலேயே சொத்துவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய அதிமுக உறுப்பினர் பிரபாகரன் இரு கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...