கோவையில் சிலிண்டருக்கு ‘பாடை’ கட்டிய இளைஞர் காங்கிரஸ்; கேஸ் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு..!

பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள மக்களை வஞ்சிக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் விலை ஏற்றம் செய்வதாக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் தெரிவித்தார்.


கோவை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸினர் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு காரணமாக மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி நூதன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் கண்டன உரையாற்றிய லெனின், பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள மக்களை வஞ்சிக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் விலை ஏற்றம் செய்வதாக தெரிவித்தார்.

தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாக்கு கேட்டு வரும்போது மட்டும் தான் இந்த தொகுதிக்கு வந்ததாகவும் அதன் பிறகு, 10 மாத காலங்களாக அவர் இங்கு வருவதில்லை என இப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் என கூறினார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் இந்தி திணிப்பைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்த அவர் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முடியாது என்றும், தமிழ்நாட்டில் பாஜக என்றும் வராது எனவும் தெரிவித்தார்.



இளைஞர் காங்கிரஸ் அந்த அமைப்பினர் முதல் போராட்டத்தைக் கோவையில் துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...