திமுக மாமன்ற உறுப்பினர் பேசும்போது அமைதியாக இருக்கும்படி கூட்டத்திலிருந்த அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சியில் தற்போது நடைபெற்றுவரும் சாதாரண கூட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பினை காண்பிப்பதற்கு` அதிமுகவினை சேர்ந்தமூன்று மாமன்ற உறுப்பினரும் கருப்பு உடை அணிந்து வந்துள்ளனர்.

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கோவை மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் கூறுகையில்;
கோவை மாநகராட்சியில் உள்ள தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சாக்கடை பிரச்சினைகளுக்குக் கடந்த அதிமுக அரசு தான் காரணம் என குற்றம் சாட்டினார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை வார்டுகளுக்கு வந்து பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதற்கு குறுக்கிட்ட நாற்பத்தி ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திமுக மாமன்ற உறுப்பினர் பேசும்போது அமைதியாக இருக்கும்படி கூட்டத்திலிருந்த அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது.