வரும் பண்டிகை நாட்களில் கூடுதல் கூட்டத்தை சமாளிக்க, ஏப்.13 காலை முதலே கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோவை: கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு தினமும் 220 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு அரசு விடுமுறை வருவதால், கோவையில் தங்கி வேலை செய்து வரும் தொழிலாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டபொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கபடவுள்ளது.
தற்போது, விடுமுறை, கோடைக்காலம் தொடங்கியதோடு பள்ளிகளிலும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டு விடுமுறையும் படிப்படியாக விடப்பட்டு வருகின்றன. இதனால் பஸ், ரயில் நிலையங்களில்கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டும், 15 புனித வெள்ளி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்காக அரசு விடுமுறை உள்ளது.
அதை தொடர்ந்து, அடுத்து இரு நாட்கள் சனி, மற்றும் ஞாயிறுக்கிழமை ஆகிய விடுமுறை தொடர்ந்து வருகிறது. அதே போல ஏப்.16 சித்ரா பவுர்ணமி என்பதால் அன்றைய தினம் பக்தர்கள் வெள்ளிங்கிரி, ஈஷா மேட்டுப்பாளையம் வனபத்திரகாளி அம்மன் கோவில்களுக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில், பண்டிகை மற்றும் சிறப்பு தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் பொதுமக்களின் பயண தேவையை கருத்தில் கொண்டு, கோவையில் இருந்து கூடுதலாக 450 சிறப்பு பேருந்துகள்இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன.
தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி, சித்ரா பவுர்ணமியையொட்டி வரும்ஏப்.13 காலை முதலே சிறப்பு பேருந்துகள் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன என்று போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.