மத்திய மண்டலம் வார்டு எண் 69-க்குட்பட்ட பகுதிகளில் TURIF திட்டத்தின் கீழ் 430 மீட்டர் தொலைவிற்கு 59-இலட்சம் மதிப்பீட்டில் மறுதார்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டனர்.
மத்திய மண்டலம் வார்டு எண் 69-க்குட்பட்ட அழகேசன் சாலையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டனர்.
மேற்கு மண்டலம் வார்டு எண் 39-க்குட்பட்ட அமராவதி வீதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு மண்டலம் வார்டு எண் 27-க்குட்பட்ட பீளமேடு, புராணி காலனியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெற்கு மண்டலம் உக்கடம் பை - பாஸ் சாலையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில்ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய மண்டலம் வார்டு எண் 69-க்குட்பட்ட என்.எஸ்.ஆர் சாலையில் சத்தியமூர்த்தி சாலை சந்திப்பு முதல் ஆரோக்கியசாமி சாலை சந்திப்பு வரை மற்றும் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு முதல் பாரதி பார்க் சாலை 4 வது வீதி சந்திப்பு வரை TURIF திட்டத்தின் கீழ் 430 மீட்டர் தொலைவிற்கு 59 இலட்சம் மதிப்பீட்டில் மறுதார்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.