கோவை காரமடையில் 'சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழை': 20-ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம் - விவசாயிகள் வேதனை....!

காற்றில் சாய்ந்த வாழைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை காரமடையில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையால் 20-ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம்,கெம்மாரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி மற்றும் வாழை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

மேலும் ஒரு சில இடங்களில் வன விலங்குகளிடமிருந்து தங்கள் பயிர்களைக் காத்து விவசாயிகள் விவசாயம் செய்துகின்றனர். மேலும் கதளி ,நேந்திரன்,பூவன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் இப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம், கெம்மாரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பனப்பாளையம் புதூர்சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சூறாவளிக்காற்றுடன் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பனப்பாளையம் புதூர் பகுதியில் பயிரிட்டிருந்த சுமார் 20-ஆயிரம் வாழை குலை தள்ளிய நிலையில், அறுவடை நேரத்தில் முறிந்து நாசமானது.



காற்றில் சாய்ந்த வாழைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...