கோவையில் 'பெட்ரோல்-டீசல்' விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் நூதன ஆர்ப்பாட்டம்..!

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ முன்பு பிச்சை எடுத்து நூதன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.



கோவை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வை கண்டித்தும் மக்கள் நீதி மய்யம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.



மத்திய அரசு உயர்த்தியபெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் தமிழக அரசு உயர்த்திய சொத்துவரி உயர்வை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் செஞ்சிலுவைச் சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மத்திய மாவட்டச் செயலாளர் பிரபு, வடக்கு மாவட்டச் செயலாளர் தர்மராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் சிட்கோ சிவா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இதில் கோவை மாவட்ட மக்கள் நீதி மையத்தின் மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர். இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை உணர்த்தும் விதமாக ஆட்டோ முன்பு பிச்சை எடுத்து நூதன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.





Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...