கோவை கற்பகம்‌ உயர் கல்விக்கழகத்தில் பட்டமளிப்பு விழா..!

கற்பகம்‌ உயர் கல்விக்கழகத்தில்‌ 2018-ஆம்‌ கல்வியாண்டில்‌ பயின்ற 2108-மாணவர்கள்‌ இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்‌ பட்டம்‌ பெற்றனர்‌.


கோவை: கற்பகம்‌ உயர் கல்விக்கழகத்தில்‌ 2018-ஆம்‌ கல்வியாண்டில்‌ பயின்ற 2108 மாணவர்கள்‌ 09.04.2022, சனி அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்‌, பட்டம்‌ பெற்றனர்‌.

கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ தலைவர்‌ டாக்டர்‌ இராச.வசந்தகுமார்‌ பட்டமளிப்பு விழாவிற்குத்‌ தலைமையேற்றார்‌. பெரியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ மேனாள்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ P.குழந்தைவேல்‌‌ பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தி, பட்டங்கள்‌ வழங்கினார்‌.



அவர்தம்‌ உரையில்‌, 'இளைஞர்களின்‌ தளராத தன்னம்பிக்கையே, சவாலான வாய்ப்புகளையும்‌ வரங்களாக்கித்‌ தருகின்றன' என்றார்‌.

குறையாத ஆர்வம்‌, புதியவற்றை நுட்பமாக ஆராய்கின்ற திறன்‌, ஆர்வம்‌ குறையாத ஈடுபாடு, தொடர்‌ முயற்சி, தோல்வியிலும்‌ தளராமை, அனுபவங்களை ஆளுமை வளர்ச்சிக்கு மூலதனமாக்குதல்‌ ஆகியவற்றை இளைஞர்கள்‌ கடைப்பிடித்தால்‌ வெற்றி உறுதி என்றார்‌.

இனி வருகிற காலங்களிலும்‌ பெருந்தொற்று போன்ற இயற்கை அபாயங்களிலிருந்து மக்களைக்‌ காப்பாற்ற அறிவியலும்‌ தொழில்நுட்பமும்‌ இணைந்து செயல்பட வேண்டியுள்ளதை இளைஞர்கள்‌ உணரவேண்டும்‌. அதற்கேற்ப அவரவரும்‌ தமக்கு ஆர்வமுள்ள துறையில்‌ ஆழ்ந்த அறிவைப்‌ பெற்று, ஆய்வு நோக்கில்‌ சமுதாயத்துக்குப்‌ பயனளிக்கின்ற ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளவேண்டும்‌ என்று வலியுறுத்தினார்‌.

கல்வியின்‌ பயன்‌ என்பது, மண்‌ பயனுற வாழவேண்டும்‌' என்ற பொது நோக்கத்தை நமக்குள்‌ நிலைக்கச்‌ செய்வதாகும்‌. இளைஞர்கள்‌ அத்தகைய சமுதாயப்‌

பொறுப்புணர்வுடன்‌ செயல்படவேண்டும்‌; அவர்கள்‌ நாடு போற்றும்படி வாழ்வதற்கு அடிப்படையாக ஒழுக்க நெறிமுறைகளில்‌ சிறக்க வேண்டும்‌' என்று கல்வியின்‌ வழியான சமுதாயப்‌ பண்பாட்டின்‌ இன்றைய தேவையினைப்‌ பட்டம்‌ பெற்ற இளைஞர்களிடம்‌ அறிவுறுத்தினார்‌.

அறிவியல்‌ வளர்ச்சி என்ற நோக்கில்‌ மட்டுமல்லாமல்‌, மனித சமுதாயத்தின்‌ அமைதியை நிலைநாட்டவும்‌ இளைஞர்களின்‌ அறிவும்‌, ஆக்கமும்‌ பயன்படவேண்டும்‌ என்றார்‌.

மாணவர்கள்‌ இன்று பேரெண்ணிக்கையில்‌, பல்கலைக்கழகங்களில்‌ பட்டம்‌ பெறுகிற வாய்ப்புகள்‌ பெருகியுள்ளன. இருந்தபோதிலும்‌ அவர்கள்‌ அவ்வறிவை ஆய்வுப்படிப்புகள்‌ வரையில்‌ மேம்படுத்திக்கொள்வதற்குரிய விழிப்புணர்வை‌ குறைவாகவே பெற்றுள்ளனர்‌.



இன்று இந்தியாவில்‌ மட்டுமல்லாமல்‌, உலகெங்கிலும்‌ மாணவர்கள்‌ தங்களது ஆய்வுப்பங்களிப்புகளாலும்‌, காப்புரிமை போன்ற அறிவுசார்‌ சொத்தினாலும்‌ வருங்கால வாழ்கையை வளமாக்கிக்‌ கொள்வதற்கு வாய்ப்புகள்‌ மிகப்‌ பெருகியுள்ளன.

அவ்வாய்ப்புகளை அவர்கள்‌ முறையாகப்‌ பயன்கொள்வதற்குத்‌ தமது இலக்கினைத்‌ தெளிவாக அறிந்திருத்தலும்‌, துல்லியமாக அதனை வரையறுத்துக்‌ கொள்ளுதலும்‌, இலக்கினைச்‌ சிறந்த செயல்‌ திட்டமாக அமைத்துக்கொள்ளுதலும்‌, செயலாக்கத்துக்குரிய தளராத மனவுறுதியைக்‌ கொண்டிருத்தலும்‌ எந்நாளும்‌ தேவை என்றார்‌.

ஜப்பான்‌ போன்ற வளர்கின்ற நாட்டிலுள்ள இளைஞர்களின்‌ திறன்‌ மேம்பாட்டுக்கு, மொழித்திறன்‌ மேம்பாடு, மென்திறன்‌ மேம்பாடு, அறிவியல்‌ மற்றும்‌ தகவல்‌ தொழில்நுட்பத்‌ திறன்‌ மேம்பாடு மற்றும்‌ ஆளுமைத்திறன்‌ மேம்பாடு ஆகியவை அடிப்படையாகவுள்ளன.

இந்திய இளைஞர்களும்‌ மேற்கண்ட திறன்களை ஒருசேர வளர்த்துக்கொண்டு நாடு பயனுற வாழவேண்டும்‌ என்று வாழ்த்துக்‌ கூறினார்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...