மரம் வெட்ட தடை கோரி ம.தி.மு.க., சார்பில் வால்பாறை நீதிமன்றத்தில் மனு..!

சின்கோனா தேயிலை தோட்டத்தில் மரம் வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும், என, ம.தி.மு.க., சார்பில் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை அருகே சின்கோனா பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவதாக வால்பாறை நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

வால்பாறை ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கல்யாணி, வால்பாறை நீதிமன்றத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகும். வால்பாறை பகுதியில் 224 ஸ்கொயர் கிலோமீட்டர்அளவில் வனப்பகுதி அமைந்துள்ளது.

இது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும், வருடத்திற்கு அதிகமாக மழை பெய்யக்கூடிய இரண்டாவது சிரபுஞ்சி என அழைக்கப்படும் சின்னக்கல்லாறு பகுதி இங்கு உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை அரியவகை பறவையான இருவாட்சி பறவை, சிங்கவால் குரங்கு, இன்னும் அரிய வகை வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது.

மேற்கு தொடர்ச்சி பகுதியில் காணப்படும் மலையானது மலையைப் பாதுகாக்கும் வண்ணம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ளமா வன சரகத்திற்கு உட்பட தமிழ் நாடு தேயிலை தோட்டம் கழகம்சின்கோனா பெரியகல்லார், சின்னகல்லார், ராயன், 5 டாப், போன்ற எஸ்டேட்கள் உள்ளன இப்பகுதியில்சாலையோரம் உள்ள வானுயர்ந்து காணப்படும் மரங்களைச் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாகவும்மரம் வெட்டி இருபது தெரியாமல் இருப்பதற்கு மரத்தின் பாதி அளவு வெட்டப்பட்டு உள்ளது.



மரத்தைச் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வருகின்றன என்று வால்பாறையைச் சேர்ந்த வன ஆர்வலரும் மதிமுக கட்சி நகரச் செயலாளருமான கல்யாணி என்பவர் வால்பாறை நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த மனுவில் கூறப்படுவதாவது மானாம்பள்ளி வனச்சரகத்தில் உட்பட்ட தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் நடத்தக்கூடிய எஸ்டேட் பகுதியிலும்வனப் பகுதியிலும் சாலையோரஉள்ளசுமார் ஐம்பது வருடத்திற்கு மேலாக உள்ள மரங்களைச் சட்டவிரோதமாகமரத்தின் புதிய தொழில்நுட்பமாகக் கிளை மரம் வெட்டுதல் என கூறி 60 முதல் 100 அடி உயரஉள்ள மரங்கள் 20 அடி உயரம் விட்டு மீதியை வெட்டி விடுகின்றனர்.

அப்படி வெட்டப்பட்ட மரங்கள் காய்ந்து விடும் நிலை காணப்படுகிறது. இதில் சுமார்1.5 மீட்டர் சுற்றளவிற்கு மேல் உள்ள மரங்கள் என கூறப்படுகிறது. வெட்டப்பட்ட மரங்களைத் தேயிலைதொழிற்சாலைக்கு விறகுக்காகவும்வெட்டப்படுகிறது. மேலும் பாதி அளவு வெட்டப்பட்ட மரங்கள் பட்டுப் போய் காய்ந்து விழுந்து விடுகிறது.

இதனால் அங்கு வாழும்வனவிலங்குகள் பறவைகள் அப்பகுதியை விட்டு இடம் பெயர்ந்து செல்வதாகவும், மரங்கள் காய்ந்துவிழுவதால் அப்பகுதியில் வெற்று இடமாக மாறிவருகிறது.இதனால் மழை பெய்வது குறையும் என்றும், ஒரு நிறுவனம் மரங்களை வெட்டுவதற்கு ஆனைமலை புலிகள் காப்பகம் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டு மரங்களை ஏலம் விட்டு முறையாக வெட்ட வேண்டும்.

இப்போதுசட்டவிரோதமாகமரங்களை வெட்டுவதால்அரசுக்கு பெரும்இழப்பு ஏற்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் மரங்களைவெட்டுவதை நிறுத்துவதற்கு வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...