இணையதள கலந்தாய்வின் போது விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர்களிடமிருந்து கட்டணம் பெற்றுக்கொள்ளப்படும்.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பட்டயப்படிப்புகளுக்கு இணையதள கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பட்டயப்படிப்புகளுக்கு இணையதள கலந்தாய்வு 06.04.2022 முதல் 09.04.2022 வரை நடை பெற உள்ளது என்று முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) அவர்கள் தெரிவித்தார்கள். இணையதள கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல் தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இணையதள கலந்தாய்வின் போது விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர்களிடமிருந்து கட்டணம் பெற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் tnau.ucanapply.com மூலம் உள்நுழைந்து 06.04.2022 முதல் 09.04.2022 மாலை 5 மணி வரை தங்கள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பம், கல்லூரி மற்றும் பாட இடஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படும். இதுகுறித்த தெளிவான படிப்படியான செயல்முறை விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர்சேர்க்கை) அவர்கள் தெரிவித்தார்கள்.