கோவையில் "லைவ் மானிடரிங்" மூலம் குடிநீர் விநியோகத்தை கண்காணித்து வருகிறோம்: 24-மணிநேர குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசனை குழு தலைவர்..!

‘லைவ் மானிடரிங்’ மூலம் குடிநீர் விநியோகங்கள் கண்காணிக்கப்பட்டு சரிசமமாக அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியின் கீழ் குடிநீர் வழங்கப்படும் அனைத்து பகுதிகளும் ‘லைவ் மானிடரிங்’ மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்றும் 24 மணிநேர குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசனை குழு தலைவர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு 24 மணிநேர குடிநீர் திட்டத்தினை சுயஸ் என்னும் பிரெஞ்சு நிறுவனத்திடம் கோவை மாநகராட்சி ஒப்படைத்தது. கோவை மாநகராட்சியின் பழைய வார்டுகளில் மட்டும் இந்த திட்டமானது செயல்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள வார்டுகளின் நிலைகுறித்தான தெளிவான தகவல்கள் எதுவுமில்லை.

மேலும், குடிநீர் வியோகங்கள் குறித்தான பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் நிலைவி வருகின்றன. பழைய வார்டுகளுக்கு உட்பட்ட சில பகுதிகளிலும் இத்திட்டத்தின் பணிகள் முழுமையடையாமல் உள்ளது.இத்திட்டத்தினை எதிர்த்து போராட்டங்களும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். குடிநீர் விநியோகம் என்பது வார்டுகளுக்கு சரிசமமாக பங்கிடுவதில்லை என்று மக்கள் பெரிதும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கோவை மாநகராட்சியில் முதல் முறையாக 76-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே 24 மணிநேர குடிநீர் திட்டமானது கொண்டுவரப்பட்டது. அதில், தெலுங்குபாலயம் ஜெயராமன்நகர் போன்ற பகுதிகளில் 1240-வீடுகளுக்கு 24-மணிநேர குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் முடிந்து 24- மணிநேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ‘லைவ் மானிடரிங்’ மூலம் குடிநீர் விநியோகங்கள் கண்காணிக்கப்பட்டு சரிசமமாக அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று 24 மணிநேர குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகத்தின் குழு தலைவர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ‘லைவ் மானிடரிங்’ மூலம் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எந்தெந்த பகுதிகளுக்கு எவ்வளவு மணிநேரம் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது என்பது குறித்தும் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது என்பது குறித்தும் கண்காணிக்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...