மாநகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும்‌ வாகனங்களை கோவை மேயர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு..!

100-வார்டுகளிலும்‌ தேங்கும்‌ குப்பைகளை தடையின்றி அகற்ற சேவை மனப்பான்மையுடன்‌ பணியாற்ற வேண்டும்‌. குப்பை இல்லா மாநகரமாக உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோவை மேயர்‌ கேட்டுக்கொண்டார்.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌, வ.உ.சி மைதானத்தில்‌ மாநகராட்சியில்‌ 100 வார்டுகளிலும்‌ குப்பை அள்ளுவதற்காகப் பயன்படுத்தப்படும்‌ மாநகராட்சி மற்றும்‌ ஒப்பந்ததாரர்கள்‌ வாகனங்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ ‌நேரில்‌ பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌, வ.உ.சி மைதானத்தில்‌ மாநகராட்சியில்‌ 100 வார்டுகளிலும்‌ குப்பை அள்ளுவதற்கு பயன்படுத்தப்படும்‌ 56 மாநகராட்சி மற்றும்‌ ஒப்பந்ததாரர்கள்‌ வாகனங்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌. இன்று (05.04.2022) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ மண்டல சுகாதார ஆய்வாளர்களிடம்‌ தெரிவித்ததாவது,

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ உள்ள 100 வார்டுகளிலும்‌ நாள்தோறும்‌ சேகாரமாகும்‌ குப்பைகளை எடுப்பதற்காகக் கோவை மாநகராட்சியில்‌ 11 வாகனங்கள்‌, 45 தனியார்‌ ஒப்பந்ததாரர்கள்‌ வாகனம்‌ என மொத்தம்‌ 56 வாகனங்கள்‌ பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ சேகாரமாகும்‌ குப்பைகளை வலையினால்‌ மூடி சாலைகள்‌ மற்றும்‌ தெருக்களில்‌ சிதறாமல்‌ வெள்ளலூர்‌ குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பை எடுக்கும்‌ வாகனங்களுக்கு முழு கொள்ளவு கொண்ட குப்பைகளில்‌ வாகனங்களில்‌ ஏற்ற வேண்டும்‌.

வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில்‌ அனைத்து தெருக்களிலும்‌ நாள்தோறும்‌ குப்பைகளை எடுக்க வேண்டும்‌. தேவைப்படும்‌ இடங்களில்‌ இரவு நேரங்களிலும்‌ குப்பைகளை அகற்ற வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்‌. ஒப்பந்ததாரர்‌ வாகனங்கள்‌ FC முறையாக காட்டப்படுகிறதா? RC மற்றும்‌ இன்சூரன்ஸ்‌ வாகனங்களில்‌ வைத்துள்ளார்களா என்பது குறித்தும்‌, நாளொன்றுக்கு எத்தனை முறை குப்பைகள்‌ எடுக்கும்‌ வாகனம்‌ வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கிற்குச் சென்றுவருகிறது என்பதையும்‌ கேட்டறிந்தார்‌.



மேலும்‌, மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும்‌ தேங்கும்‌ குப்பைகளை தடையின்றி அகற்ற சேவை மனப்பான்மையுடன்‌ பணியாற்ற வேண்டும்‌. குப்பை இல்லா மாநகரமாக உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷா்மிளா, நகர்நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌ சரவணன்‌, சங்கர்‌, மோகனசுந்தரி, மாரிச்செல்வி, அண்ணாதுரை மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...