கோவையில் கே.ஜி. குழும நிறுவனங்களின் நூற்றாண்டு விழா: அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு..!

இந்த நூற்றாண்டு விழாவில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு விருந்தினராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கலந்து கொள்கின்றனர்.


கோவை: 48-ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிபங்கேற்கிறார்.

கோவையில் செயல்பட்டு வரும் கே.ஜி குழும நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மற்றும் மருத்துவமனையின் 48-ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிபங்கேற்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேஜி மருத்துவமனையின் தலைவர் மற்றும் மருத்துவர் பத்மஸ்ரீ பக்தவச்சலம் பேசியதாவது:-

கோவையில் கே.ஜி.மருத்துவமனை தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவு பெற்றதையும், என் தந்தை கே.கோவிந்தசாமி நாயுடு அவர்களால் நிறுவப்பட்ட கே.ஜி. குழுமங்களின் நூற்றாண்டு விழாவையும் இன்று கொண்டாட உள்ளோம்.

இந்த மருத்துவமனையில் சுமார் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குச் சிறப்பான சிகிச்சை அளித்துள்ளோம் .மகளிர் மருத்துவம் தீவிர சிகிச்சைப் பிரிவு, விபத்து பிரிவு, என பல பிரிவுகளில் உயிர் காக்கும் துறைகள் உள்ளன. இந்த மருத்துவமனை லாப நோக்கத்திற்காகத் துவக்கப்பட்டது இல்லை என கூறினர்.

எங்கள் மருத்துவமனையில் 250 மருத்துவர்கள், 300 செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என சுமார் 1250 பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டும் வகையிலும் 135 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்த நூற்றாண்டு விழாவில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு விருந்தினராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கலந்து கொள்கின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...