கோவை எட்டிமடை அய்யம்பதி மலைக்கிராமத்தில் பொதுமக்கள் அடிப்படைத் தேவைகள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: எட்டிமடை அய்யம்பதி மலைக்கிராமத்தில் பொதுமக்கள் அடிப்படைத் தேவைகள்குறித்து ஆய்வு மேற்கொண்டு அதனை அதிகாரிகள் பதிவு செய்து சென்றனர்.
கோவை எட்டிமடை அடுத்த அய்யம்பதி மலை கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலருக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் இல்லை எனவும், அவை எவ்வாறு பெறவேண்டும் என்பது தெரியவில்லை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ தலைமையில், மதுக்கரை வட்டாட்சியர் பர்சானா, வட்ட வழங்கல் அலுவலர் இராமலட்சுமி வருவாய் ஆய்வாளர் அமுதவல்லி, எட்டிமடை பேரூராட்சி தலைவர் கீதா ஆனந்தகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், இன்றுஅய்யம்பதி மலை கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மலைவாழ் கிராமத்தில் உள்ள மக்களுக்கு எஸ்.டி சான்றிதழ், ஆதார் அட்டை, அரசு நியாயவிலைக்கடை மற்றும் குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், புதிய குடும்ப அட்டை வழங்குதல், பட்டா மாறுதல், வீட்டுமனை கட்டிடங்கள், தட்கோ கடன் உதவி வழங்குதல், வாக்காளர் அடையாள அட்டை, மற்றும்பள்ளி குழந்தைகளுக்குப் போக்குவரத்து வசதி மற்றும் உயர்கல்வி வசதி போன்ற நலத்திட்டங்கள் தொடர்பாகத் தொடர்பான தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இதையடுத்து அந்த மலை கிராமத்தில் விரைவில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக என்னென்ன தேவைகள் உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதனை அதிகாரிகள் பதிவு செய்து சென்றனர்.