கோவையில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் குப்பை வரி, பார்க்கிங் வரி விதிக்கப்பட வேண்டும் - நிதிநிலை கூட்டத்தொடரில் வலியுறுத்தல்..!

72வது வார்டு உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், மாநகராட்சி பட்ஜெட்டில் குப்பை வரி மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாகனம் நிறுத்த வரி விதிக்கும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி.



கோவை: கோவை மாநகராட்சியில் குப்பை வரி, பார்க்கிங் வரி போன்றவற்றை மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்திட வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினர் முதல் நிதிநிலை கூட்டத்திலேயே வலியுறுத்தினார்.

கோவை மாநகராட்சியில் 2022 -23ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. 19 கோடி ரூபாய் பற்றாகுறை பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணி அளவில் மாமன்ற கூட்ட அரங்கில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர்கள் 3 பேரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். திமுக கவுன்சிலர்களும், திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பட்ஜெட்டை பாராட்டி பேசினர்.

இந்த பட்ஜெட்டை வரவேற்று பேசிய 12வது வார்டு சிபிஎம் கவுன்சிலர் ராமமூர்த்தி, கல்வி மற்றும் சாலை போன்றவற்றிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இருக்காது, இவற்றிக்கு இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.



மேலும், தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் மாநகராட்சியில் உள்ள 100 மாமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிய அளவில் அலுவலகம் அமைத்து கொடுக்க மாநகராட்சி வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பேசிய 72வது வார்டு திமுக கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ், மாநகராட்சி பட்ஜெட்டில் குப்பை வரி மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாகனம் நிறுத்த வரி விதிக்கும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சிகளின் தரவரிசை தொடர்பான பட்டியலில் வருவதற்கான விதிமுறைகளில், இவற்றிக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், சுகாதார குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இது நடைமுறைப்படுத்தப்படும் என விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கார்த்திக் செல்வராஜ் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பார்க்கிங் கட்டணம், குப்பை வரி போன்றவை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, பட்ஜெட்டை வரவேற்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...