தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பாலை கீழே கொட்டி ஆர்ப்பாட்டம்.!!

ஆவின் பால் கொள்முதல் விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி வழங்க கோரி, விவசாயிகள் பாலை ஊற்றி நூதன முறையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: பால் உற்பத்தியாளர்களுக்குக் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், பால் கொள்முதல் விலையை விவசாயிகளுக்கு உயர்த்தி தர வலியுறுத்தி பாலை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர், "விவசாயிகள் சில மாதங்களாக கால்நடை தீவனங்கள், இடு பொருட்கள் விலை ஏற்றத்தால் பாதிப்படைந்துள்ளனர் என்றும் ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில் மாட்டுத் தீவனம் மானிய விலையில் வழங்கி வந்தனர்.

தற்போது அதை நிறுத்தி விட்டனர் எனவும் தெரிவித்தன. மாட்டுத் தீவனம் உள்ளிட்ட பொருட்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை உயர்ந்துள்ளது என தெரிவித்த அவர்கள் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டருக்கு 28 முதல், 29 வரை வாங்குகின்றனர் என்றும் ஆனால், தற்போது, ஆவின் பால் லிட்டருக்கு ரூ50 க்கு விற்பனை செய கின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு விலையை உயர்த்தி தருவதில்லை என வருத்தம் தெரிவித்தனர்.



எனவே தற்போது கொடுத்து வரும் கொள்முதல் விலையைக் காட்டிலும் லிட்டர் ஒன்றிற்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும். மேலும், ஆவின் நிர்வாகம் கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்களைத் தடுக்க, கொள்முதல் மையங்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி, கேனில் பால் மற்றும் இடு பொருட்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...