கோவை எட்டிமடை பகுதியில் தடையை மீறி நடைபெற்ற ரேக்ளா பந்தையம்

கோவை எட்டிமடை பகுதியில் ஐல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் மீதான தடையை நீக்கக்கோரி, தடையை மீறி ரேக்ளா ஆர்வலர்கள் ரேக்ளா ஊர்வலம் நடத்தினர்.


ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோவையை அடுத்த எட்டிமடை பகுதியில் ஐல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் மீதான தடையை நீக்கக்கோரி, ரேக்ளா ஆர்வலர்கள் ரேக்ளா வண்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பாரிய விளையாட்டு போட்டிகளான ஐல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவை மீதான தடை காரணமாக நாட்டு மாடுகள் அழிய வாய்ப்பிருப்பதாகவும், பீட்டா அமைப்பை தடை செய்வதுடன் ஐல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்டவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரேக்ளா ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் இப்போட்டிகளுக்கு அனுமதி வழங்கவில்லை எனில், தடையை மீறி நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர். 



இதையடுத்து தடையை மீறி 50 க்கும் ரேக்ளா வண்டிகளில் 4 கிலோ மீட்டர் தூரம் ரேக்ளா ஊர்வலம் நடத்தப்பட்டது. எட்டிமடை பகுதியில் துவங்கிய ரேக்ளா ஊர்வலம் கிராம பகுதிகள் வழியாக சென்று மீண்டும் எட்டிமடை பகுதியை அடைந்தது. தடையை மீறி ரேக்ளா ஊர்வலம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...