தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழகத்துக்கு மூன்று தங்க பதக்கங்கள்


கோவையில் நடைபெற்றுவரும் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் மூன்று தங்க பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.



கோவை நேரு விளையாட்டு அரங்கில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான 77 வது தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைகழகம் சார்பாக நடத்தப்படும் இப்போட்டிகளில், நாடு முழுவதும் உள்ள 189 பல்கலைகழகங்களை சேர்ந்த 2,605 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற 46 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் நாளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளுக்கான தேர்வு சுற்றுகள் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று மும்முறை தாண்டுதல், 100 மற்றும் 800 மீட்டர் ஓட்டபந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. 



இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தமிழக வீராங்கனைகள் 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் பாரதியார் பல்கலைகழகத்தை சேர்ந்த அன்பரசி என்னும் மாணவி மும்முறை தாண்டும் போட்டியில் தங்க பதக்கத்தையும், மெட்ராஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பிரியா என்னும் வீராங்கனை 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார். தொடர்ந்து விளையாடிய மெட்ராஸ் பல்கலைக்கழகத்தை  சேர்ந்த அர்ச்சனா ஆகியோர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் சிறப்பாக விளையாடி  தங்க பதக்கத்தையும், அடுத்த இடத்தை பிடித்த மதுரை காமராஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த ரேவதி வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...