கோவை சேரன் மாநகர் மாநகராட்சி 22வது வார்டில் சுகாதார அலுவலகம் திறப்பு..!

22வது வார்டு உறுப்பினர் கோவை பாபு புதிய சுகாதார அலுவலகத்தை திறந்து வைத்து தூய்மை பணியாளர்களுக்கு கவச உடை மற்றும் கையுறைகளை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள உதவும் வகையில் சேரன் மாநகரில் சுகாதார அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு புதிய சுகாதார அலுவலகத்தை திறந்து வைத்து தூய்மை பணியாளர்களுக்கு கவச உடை மற்றும் கையுறைகளை வழங்கினார்.



இதுகுறித்து தூய்மைப் பணியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

கோவை மாநகராட்சி 22வது மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் முதலில் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து உள்ளேன். நீங்கள் தெரிவித்த குறைகள் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யப்படும்.

குடியிருப்பு பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும்போது தூய்மைப் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

சில இடங்களில் மக்கள் கோபமாக பேசினாலும் அமைதி காக்க வேண்டும். சிறப்பான முறையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் தூய்மை பணி திட்டங்கள் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த உங்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்." என்றார்.



நிகழ்ச்சியில் கோவை மேற்கு மண்டல திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன், தொ.மு.ச பேரவை துணைத் தலைவர் ரத்தினவேலு, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் முருகா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) கன்னியப்பன், சுகாதார மேற்பார்வையாளர் சாமிநாதன் மற்றும் 22வது வட்ட திமுக கழக உறுப்பினர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...