கோவையில் எல்.ஐ.சி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி பங்கு விற்பனையை எதிர்த்து பல்வேறு இடங்களில் இன்று அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கோவையில் எல்.ஐ.சி அனைத்து அலுவலகங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: எல்.ஐ.சி பங்குகள் விற்கப்படுவதைக் கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எல்ஐசி பங்கு விற்பனையை எதிர்த்து பல்வேறு இடங்களில் இன்று அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாகக் கோவையில் எல்ஐசி அனைத்து அலுவலகங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை திருச்சாலையிலுள்ள எல்.ஐ.சி பகுதி அலுவலகத்தின் முன்பு அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் வி.சுரேஷ், துளசிதரன் உள்ளிட்ட திரளான ஊழியர்கள் பங்கேற்று காப்பீடு பங்குகளின் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன முழக்கமிட்டனர்.



இதேபோன்று கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் கிளை, அவிநாசிசாலை கிளை, 100 அடி சாலை கிளை, டாடாபாத் கிளை, வடகோவை கிளை, ஆர்.எஸ்.புரம் கிளை, போத்தனூர் கிளை மற்றும் மாவட்டங்களில் அமைந்துள்ள மற்ற கிளைகளின் முன்பாகவும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.



Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...