திருப்பூரில் அரசு தொடக்கப்பள்ளியை மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

ஆய்வு மேற்கொண்ட மேயர் மேலும் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த படும் என்றும் தனியார்ப் பள்ளிகளை காட்டிலும் சிறந்த வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மாஸ்கோ நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியை மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாஸ்கோ நகரில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி போதிய அடிப்படை வசதியின்றி காணப்படுவதாகவும், ஏறத்தாள 800-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் தொடக்கப்பள்ளியில் 5- ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

மேலும் இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என கடந்த மார்ச் 7-ஆம் தேதி திருப்பூர் மாநகராட்சியின் மேயர் தினேஷ் குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.



இதனைத் தொடர்ந்து இன்று திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் மற்றும் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் சுப்ரமணியம் அப்பள்ளிக்கு நேரில் சென்றனர்.



ஆய்வு மேற்கொண்ட மேயர் மேலும் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த படும் என்றும் தனியார்ப் பள்ளிகளை காட்டிலும் சிறந்த வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...