இதனிடையே, இன்னும் 23 நாட்களே திட்ட அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளதால் தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் 2022 - 23ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை மேற்கொள்ளும் பணிகளில் கோவை மாநகராட்சியின் கணக்கு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளைப் போலவே கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு பட்ஜெட்டினை திட்ட அறிக்கையில் தாக்கல் செய்வது வழக்கம். மாநகராட்சி கணக்கு பிரிவினர் தயாரிக்கும் அறிக்கையினை வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர், அக்குழுக் கூட்டத்தில் விவாதித்து இறுதி செய்து மாமன்றத்தில் மேயரிடம் ஒப்படைப்பார்.
இதனைத் தொடர்ந்து, மேயர் மன்றத்தில் தாக்கல் செய்து பட்ஜெட் குறித்து உரை நிகழ்த்துவார். ஏற்கனவே அறிவித்திருந்த திட்டங்கள், அத்திட்டங்கள் குறித்தான தற்போதைய நிலை மற்றும் புதிய திட்டங்களை வெளியிடுவார்.
2016க்கு பின்னர் தற்பொழுது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தமையால் 2022ம் ஆண்டிற்கு முன்னதாக மாநகராட்சி ஆணையராக இருந்தவர்களே மாநகராட்சியின் திட்ட அறிக்கையினை வெளியிட்டு வந்தனர்.
தற்போது மாமன்ற உறுப்பினர்கள் மேயர், துணை மேயர், ஆகியோர் பொறுப்பேற்றுள்ளதால் 2022-23 திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதற்கான பணியினை தற்போது மாநகராட்சியின் கணக்குப் பிரிவு தீவிரமாக துவங்கியுள்ளது.
பொறியியல், சுகாதாரம், நகரமைப்பு மற்றும் கல்விப் பிரிவுகளில் இருந்து ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும், எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பது போன்ற மண்டலங்கள் வாரியாக கோரிக்கை அறிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு துறையில் இருந்தும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த தற்போதைய நிலை என்னவென்றும் கேட்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் நிலைகுழுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கோவை மாநகராட்சி, தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை எதிர்பார்க்கின்றது.
ஏனெனில், வரவு செலவு திட்ட அறிக்கை, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுக் கூட்டத்தின் தீர்மானத்தை நிறைவேற்றி தேர்ந்தெடுக்கப்படும் அக்குழுவின் தலைவரே மேயரிடம் ஒப்படைப்பார். இன்னும் 23 நாட்களே திட்ட அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளதால் தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.