கோகுல் ராஜ் கொலை வழக்கில் 3 ஆயுள் தண்டனை பெற்ற முக்கிய குற்றவாளி மதுரை மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றம்..!

தமிழகத்தை உலுக்கிய கோகுல் ராஜ் மரணத்தில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் நிர்வாக காரணங்களுக்காக கோவை மத்திய சிறைக்கு மாற்றம்.


கோவை: கோகுல் ராஜ் கொலை வழக்கில் 3 ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியை நிர்வாக காரணங்களுக்காக மதுரை மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றினர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 3 ஆயுள் தண்டனை பெற்று, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ், நிர்வாக காரணமாக கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், பலத்த பாதுகாப்புடன் வந்த யுவராஜ் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கடந்த 8ம் தேதி யுவராஜ், அவரது ஓட்டுநருக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் கூட்டாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான யுவராஜை நிர்வாக காரணங்களுக்காக மதுரை மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்து சிறைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதையடுத்து, யுவராஜ் மதுரை மத்திய சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் கோவை சிறைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், கோவை மத்திய சிறைக்கு வந்த யுவராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...