உலக தேசிய நுகர்வோர் தின விழா நிகழ்ச்சியை நுகர்வோர் அமைப்புகள் புறக்கணிப்பு

கோவை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள தேசிய மற்றும் உலக நுகர்வோர் தின விழா மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு கூட்டத்தை அனைத்து நுகர்வோர் அமைப்புகள் புறக்கணித்துள்ளனர்.


கோவை: தேசிய மற்றும் உலக நுகர்வோர் தின விழா மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு கூட்டத்தில், அனைத்து நுகர்வோர் அமைப்புகளும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள தேசிய மற்றும் உலக நுகர்வோர் தின விழா மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாகப் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி ஓவியப்போட்டி ஆகியவைகளில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்குப் பரிசளிப்பும் சான்றிதழ் வழங்குதல் நிகழ்ச்சியும் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட நுகர்வோர் அமைப்புகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் மாலையில் நுகர்வோர் அமைப்புகளுடன் கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடைபெற உள்ளதால் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வேறொரு தேதிக்கு இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கோவையில் உள்ள அனைத்து தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஆனால் வேறு ஒரு தேதிக்கு நிகழ்ச்சி நடத்த இயலாது என்று மாவட்ட நிர்வாகம் மறுத்ததால் நாளை நடைபெற உள்ள தேசிய உலக நுகர்வோர் தினவிழா நிகழ்ச்சியை அனைத்து நுகர்வோர் அமைப்புகளும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கான கடிதம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோருக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...