ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிலிருந்து விடுப்பில் ஊர் திரும்பிய கோவை மாணவர்கள்..!

ரஷ்யாவில் பயப்படும்படி எதுவும் இல்லை என்றும், பெற்றோர்கள் அச்சப்படுவதன் காரணமாகவே வந்ததாகவும் மாணவர்கள் பேட்டி.



கோவை: ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிலிருந்து விடுப்பில் கோவை மாணவர்கள் ஊர் திரும்பியுள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் நாட்டிலிருந்து இந்திய மாணவர்கள் இந்தியா திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யா நாட்டு எல்லையில் உள்ள கிரிமியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கும்படி இந்திய மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, கிரிமியா பல்கலைக்கழகம், ஊருக்குச் செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் ஊருக்குச் செல்லலாம் என அனுமதி அளித்தது.



அனுமதியை அடுத்து கோவையைச் சேர்ந்த மாணவர்கள் புவனேஷ் கார்த்திக், டீனா ஜெனிபர் ஆகியோர் விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறுகையில்,



ரஷ்யா போரில் ஈடுபட்டு இருப்பதால் பெற்றோர் பயப்படுவதாகவும், அவர்கள் அழுத்தம் காரணமாகவே ஊர் திரும்பியதாகவும் தெரிவித்தனர். கிரிமியா பல்கலைக்கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பி இருப்பதாகவும் கூறினர்.

ரஷ்யாவில் கிரிமியா பல்கலையில் மட்டுமே இந்திய மாணவர்கள் விருப்பப்பட்டால் ஊருக்குச் செல்லலாம் என அறிவித்திருப்பதாகவும், ஆன்லைன் மூலம் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ரஷ்யாவில் பயப்படும்படி எதுவும் இல்லை என்றும் பெற்றோர்கள் அச்சப்படுவதன் காரணமாகவே வந்ததாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...