கோவை சிங்காநல்லூர் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி வணிக நிறுவனங்களில் வசூல் வேட்டை - முன்னாள் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது..!

மேலும், கொரோனா காலத்தில் அபராதம் விதிக்க மாநகராட்சியில் கொடுக்கப்பட்ட ரசீதை வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி வணிக நிறுவனங்களில் வசூல் வேட்டை நடத்திய முன்னாள் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர், நீலிகோணாம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு, கடந்த சில தினங்களாக திடீரென வந்த நபர் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி, வீதி மீறல் உள்ளதாக அபராதம் விதித்து அதற்கான ரசீதையும் கொடுத்து பணத்தை வாங்கிச் சென்றுள்ளார்.

மேலும், ஒவ்வொரு கடையிலும் சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்துக் கடை உரிமையாளர்கள் கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரி சொர்ணகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் யாரும் அபராதம் விதிக்கவில்லை என கூறிய, அவர் மறுமுறை வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் சவுரிபாளையம் தனியார் வணிக நிறுவனத்திற்கு வந்த சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்துள்ளார். இதையடுத்து கடை உரிமையாளர் சொர்ணகுமாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அதிகாரி அங்கு சென்று சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சிவக்குமாரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் மாநகராட்சியில் குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர் என்பது தெரியவந்தது.

கொரோனா காலத்தில் அபராதம் விதிக்க மாநகராட்சியில் கொடுக்கப்பட்ட ரசீதை வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த போலி ஐடி கார்டு, ரசீது புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், சிவக்குமார் மீது 2 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...