கோவையில் குடிநீர் விநியோகங்களை கையாள 'ஸ்கேடா சிஸ்டம்' என்ற முறையை அமல்படுத்த உள்ளோம் - மாநகராட்சி ஆணையர்

கோவையில் குடிநீர் விநியோகங்களை கையாள “ஸ்கேடா சிஸ்டம்” (SCADA system) (மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல்) என்ற முறையை அமல்படுத்த உள்ளோம் என்று கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் குடிநீர் விநியோகங்களை கையாள “ஸ்கேடா சிஸ்டம்” என்ற முறையை அமல்படுத்த உள்ளோம் என்று கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்காரா தெரிவித்துள்ளார்.

சிறுவாணி பிரச்சினை தொடர்ந்தால் கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்காரா தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்குச் சிறுவாணி, பில்லூர் அணைகள் மற்றும் ஆழியாறு, பவானி ஆற்றுப் பகுதிகளிலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறுவாணியிலிருந்து 10.1 கோடி லிட்டர் சதவீதம் தண்ணீர் தினமும் எடுக்க வேண்டும் ஆனால் கேரள அரசு இதற்கு ஒத்துழைப்பு தராததால் தினமும் 5 முதல் 6 லிட்டர் தண்ணீர் சதவீதத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர முடிகிறது. அதனால் தண்ணீர் தட்டுப்பாடு கோவையில் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

மேலும் நவம்பர் மாதம் கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்ய மாநகராட்சி உட்படும் என தெரிவித்திருந்தார் அதனைச் செய்ய முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனைக் குறித்து மாநகராட்சி ஆணையர் கூறியதாவது,

சிறுவாணி பிரச்சினையால் மாநகராட்சி பகுதிகளுக்குக் குடிநீர் வினியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் தொட்டிக்கு அருகாமையில் உள்ளவர்களுக்குத் தொடர்ச்சியாக நாற்பது மணிநேரம் தண்ணீர் கிடைத்து வருகிறது.

மேலும், சிறிது தூரம் ஆக உள்ளவர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் கிடைக்கிறது என தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் ஒரு பகுதிக்கு 5 நாட்களுக்கு ஒரு முறையும் சில பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையும் இன்னும் சில பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்ய முடிகிறது.

இதுபோன்ற தண்ணீர் விநியோகங்களை கையால “ஸ்கேடா சிஸ்டம்” என்ற முறையை அமல்படுத்த உள்ளோம், முறைக்காக மீட்டர் பயன்படுத்தவும் தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளோம்.

இப்பொழுது தொழில்நுட்ப அனுமதிக்காகக் காத்திருக்கிறோம் அனுமதி பெற்றவுடன் டென்டர் கோரி பணிகளை உடனே துவங்கிவிடுவோம். சிறுவாணி பிரச்சினை குறித்து தமிழக முதல்வருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...