இருகூர் பேரூராட்சிக்குட்பட்ட இராவத்தூர் கிராமத்தைத் தத்தெடுக்கும் விழா

கிராமம் தத்தெடுப்பு விழா 2022 ஆர்.வி.எஸ் கல்வி அறக்கட்டளை மற்றும் மகளிர் சுய உதவிக்குழு, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து இருகூர் பேரூராட்சிக்குட்பட்ட இராவத்தூர் கிராமத்தைத் தத்தெடுக்கும் விழா மற்றும் கிராமப்புற பெண்களுக்கு நூலகம் அமைத்தல் விழா இன்று நடைபெற்றது.



கோவை: இருகூர் பேரூராட்சிக்குட்பட்ட இராவத்தூர் கிராமத்தைத் தத்தெடுக்கும் விழா மற்றும் கிராமப்புற பெண்களுக்கு நூலகம் அமைத்தல் விழா இன்று நடைபெற்றது.



இவ்விழாவில் கல்லூரி மேலாண்மை அறங்காவலர் செந்தில் கணேஷ் மற்றும் தாளாளர் வித்யா லட்சுமி செந்தில் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர். விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் த.சிவகுமார் கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

கல்லூரிச் செயலர் பேராசிரியர் சாரம்மா சாமுவேல் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். இருகூர் பேரூராட்சி தலைவர் ஆ. சந்திரன் கலந்து கொண்டு கிராம முன்னேற்றம் குறித்தும் கிராம பெண்கள் கல்வி மற்றும் சுயதொழில்களில் தன்னிறைவு பெற வேண்டும் என்றும், இராவத்தூர் கிராமத்தை ஆர்.வி.எஸ் கல்வி அறக்கட்டளை தத்தெடுத்தது கிராமத்திற்குக் கிடைத்த பெருமையென்றும் பேசினார்.



சிறப்பு விருந்தினராக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த எலீணா இசட் மோசஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்றும், பல சாதனைகளைப் பெண்கள் படைத்தல் வேண்டும் என்றும் பேசினார். மேலும் தான் பல மைல்களைத் தாண்டி வந்தாலும் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தன்னிகரற்று விளங்க வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு சகோதரர்களுக்கும் உதவி செய்ததாகவும், பெற்றோர்களின் உறுதுணை இருந்தால் மட்டுமே பெண்கள் முன்னேற முடியும் என்றும் பேசினார்.

மாணவர் நல மன்ற தலைவர் முனைவர் விவேகானந்தர் கலந்து கொண்டு பெண்கள் நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மகளிர் சுயதொழில் கற்று ஊருக்கும், சமுதாயத்திற்கும் தங்கள் பங்களிப்பை அளித்திட வேண்டும் என்றும் பேசினார்.

இவ்விழாவில் துணை முதல்வர் முனைவர் ஐயப்ப தாஸ் நன்றியுரை வழங்கினார். துறை இயக்குனர்கள், துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...