கொரியர் OTP எண் என கூறி வங்கி கணக்கிலிருந்து பணம் அபேஸ்

கொரியர் OTP எண் என கூறி வங்கி கணக்கிலிருந்து பணம் பல்வேறு தவணைகளாக உடனடியாக எடுக்கப்பட்டது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கொரியர் OTP எண் என கூறி வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை செல்வபுரம் முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மனைவி சந்திரலேக்கா (50). பாலு ஜனா சிறு சேமிப்பு வங்கி என்ற வங்கியில் சேமிப்பு மற்றும் டெபாசிட் கணக்கு வைத்துள்ளார்.

இவருடைய செல்போன் எண்ணை அனைத்து வங்கி கணக்குகளுக்கும் கொடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் போட்டிருந்தார். அதற்குரிய ஆவணங்கள் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என வங்கியிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக பாலுவை ஒருவர் செல்போன் மூலம் அழைத்துள்ளார். மேலும் கொரியர் டெலிவரி செய்வதற்கு OTP எண் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதைக் கூறினால் அரைமணிநேரத்தில் கொரியரை கொடுத்து விடுவதாக அந்த நபர் கூறியுள்ளார்.

இதையடுத்து செல்போன் எண்ணுக்கு வந்த OTP குறியீட்டு எண்ணை அந்த நபருக்கு பாலு தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து 2 லட்சத்து 39 ஆயிரத்து 980 ரூபாய் பல்வேறு தவணைகளாக உடனடியாக எடுக்கப்பட்டது.

இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த பாலு வங்கியை தொடர்பு கொண்டபோது மோசடி ஆசாமிகள் பணத்தை எடுத்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரலேகா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...