கோவையில் போலியான வங்கி இணைய இணைப்பை அனுப்பி இருவேறு இடங்களில் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: போலியான வங்கி இணைய இணைப்பை அனுப்பி கோவையில் இருவேறு இடங்களில் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கணபதி மூகாம்பிகை நகர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் உன்னிகிருஷ்ணன் ( 51). இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் உங்களது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்றும் அதனை புதுப்பிக்க பான்கார்டு மற்றும் தனிப்பட்ட விவரங்களை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் அந்த இணைப்பை கிளிக் செய்தபோது வங்கியின் இணையதளம் போலவே காட்சியளித்த இணையதளத்தில் பான் கார்டு மற்றும் அனைத்து விபரங்களையும் உன்னிகிருஷ்ணன் பூர்த்தி செய்தார்.
சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளாக 9 லட்சத்து 93 ஆயிரத்து 206 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக மெசேஜ் வந்தது. பின்னர் அவர் வங்கியைத் தொடர்பு கொண்டபோது மோசடி ஆசாமிகள் பணத்தை எடுத்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உன்னிகிருஷ்ணன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
கோவை காளப்பட்டி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சின்னமலை கவுண்டர் என்பவரின் மகன் துரைராஜ் (50). இவர் செல்போனுக்கு வங்கி கணக்கிற்கு பான் கார்டு உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என மெசேஜ் வந்துள்ளது.
இதையடுத்து அவர் அந்த இணைப்பை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்த அதே சமயத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக மெசேஜ் வந்தது.
இதை அடுத்து அவர் வங்கியை தொடர்பு கொண்டபோது மோசடி ஆசாமிகள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து துரைராஜ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.