சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றதில் கோவை மாநகர போலீஸ் முதலிடம்: போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தகவல்

சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றதில் கோவை மாநகர போலீஸ் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளதாகத் போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தெரிவித்து உள்ளார். 3 நிமிடம் 12 வினாடிகளில் சென்று கரூர் போலீஸ் 2-வது இடத்தையும், 3 நிமிடம் 17 வினாடிகளில் சென்று தூத்துக்குடி மாநகர போலீஸ் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளது.


கோவை: சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றதில் கோவை மாநகர போலீஸ் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளதாகத் போலீஸ் கமிஷனர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் கூறியதாவது:-

கோவை மாநகரில் 15 போலீஸ் நிலையங்கள் உள்ளன. 24 ரோந்து வாகனங்கள் 24 மணிநேரமும் ரோந்து சுற்றி வருகின்றன. ஒரு சம்பவம் நடைபெற்றால் அவசர எண்ணான 100-க்கு பொதுமக்கள் தகவல் தெரிவிப்பார்கள்.

அந்த தகவல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும். அதன் அடிப்படையில் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி அருகே ரோந்து செல்லும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்படும். உடனே போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வார்கள்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் ரோந்து வாகனம் எத்தனை நிமிடங்களில் சம்பவ இடத்துக்குச் சென்று சேர்ந்தது என்று பதிவு செய்யப்படுகிறது.

அதன்படி 2 நிமிடம் 59 வினாடிகளில் ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று கோவை மாநகர போலீஸ் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்று உள்ளது.

3 நிமிடம் 12 வினாடிகளில் சென்று கரூர் போலீஸ் 2-வது இடத்தையும், 3 நிமிடம் 17 வினாடிகளில் சென்று தூத்துக்குடி மாநகர போலீஸ் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளது. முதலிடம் பிடித்த கோவை மாநகர போலீசாருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அனைத்து ரோந்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது. கோவையில் கடந்த 2 மாதங்களாக விபத்து உயிரிழப்பு அதிகரித்து உள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேம்பால பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போக்கு வரத்து நெரிசல் உள்ளது.

திருச்சி ரோடு சுங்கம், மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் பகுதிகளில் மேம்பாலப் பணிகள் முடிவடைந்து உள்ளதால் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும்போது போக்குவரத்து நெரிசல் மேலும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...