கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி - வேலூரைச் சேர்ந்த ஆசாமிக்கு போலீசார் வலை வீச்சு..!

புகாரின் பேரில், கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசாமியைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் 23 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த வேலூரைச் சேர்ந்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர் சாத்தப்ப தேவர் என்பவரின் மகன் போஸ் (64). இவருக்கு சென்னையைச் சேர்ந்த கந்தசாமி என்ற வழக்கறிஞர் நண்பர் ஆவார்.

இந்நிலையில், கந்தசாமி மூலம் வேலூர் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் போஸுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகமானார். பிரகாஷ் தனக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் என்றும், அரசு வேலை யாருக்காவது தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் போஸிடம் கூறியுள்ளார். இதேபோல வக்கீல் கந்தசாமியிடமும் பிரகாஷ் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, கந்தசாமி தனக்குத் தெரிந்த நபர்களிடம் இருந்து அரசு வேலைக்காக சில லட்ச ரூபாயை பிரகாஷிடம் கொடுத்துள்ளார். இது பற்றிய தகவலையும் போஸ் இடம் கூறியிருக்கிறார்.

இதை நம்பிய போஸ் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பிரகாஷ் குறித்து கூறியுள்ளார். மேலும், அரசு வேலை தேவைப்பட்டால் உடனடியாக அவர் ஏற்பாடு செய்து தருவார் எனவும் நம்பிக்கையூட்டும் விதமாகக் கூறினார்.

இந்நிலையில், கோவைக்கு முதுகு வலிக்காக சிகிச்சை பெற பிரகாஷ் குடும்பத்தோடு வந்துள்ளார். அப்போது பிரகாஷின் மனைவியும் போஸிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பேசி இருக்கிறார்.

இதையடுத்து, போஸின் நண்பர்கள் மற்றும் உறவினர்களான ஜான், தட்சிணா மூர்த்தி, செல்வராஜ், மோகன்தாஸ், செந்தில்ராஜ் உட்பட பலர் 23 லட்ச ரூபாய் வரை பிரகாஷிடம் கொடுத்துள்ளனர். ஆனால் பிரகாஷிடம் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. அவரும் விரைவில் வேலை கிடைத்து விடும் என நம்பிக்கை ஊட்டும் விதமாக கூறி வந்துள்ளார்.

இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கொடுத்த பணத்தை போஸ் உட்பட அனைவரும் திருப்பிக் கேட்டனர். ஆனால் பிரகாஷ் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து போஸ் கோவை ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், போலீசார் அரசு வேலை வாங்கித் தருவதாக 23 லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக உள்ள பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...