கோவையில் மதம் மாறி காதல் திருமணம் செய்த இளைஞரின் தந்தையைக் கொல்ல முயற்சி - வாட்ஸ்அப்பில் திட்டம் தீட்டிய 5 பேர் கைது..!

தேசிய புலனாய்வு முகமை, இது தொடர்பாக கோவை போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் 5 பேரை கைது அவினாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இளைஞரின் தந்தையை துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்ய வாட்ஸ் ஆப்பில் திட்டம் தீட்டிய 5 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவரது மகன் அருண்குமார் (28), ஹைதராபாத்தில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 7 மாதங்களாக சொந்த ஊரிலிருந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் ஹைதராபாத்தில் பணியாற்றிய போது, அங்கு தங்கியிருந்த திருவாரூரை சேர்ந்த சஹானா என்பவருடன் காதல் ஏற்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் இருவரும் அருண்குமார் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு கோவையில் வசித்து வருகின்றனர்.

இதனையடுத்து, திருமணத்திற்குப் பிறகு இசுலாமியரான சஹானா இந்து மதப்படி மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சஹானாவின் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள், அருணை இசுலாமிய மதத்திற்கு மாறும்படி வலியுறுத்தி வந்துள்ளனர்.

இதற்கு குமரேசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சஹானாவின் உறவினர்கள் வைத்துள்ள வாட்ஸ் ஆப் குழுவில் இது தொடர்பாக விவாதித்து வந்துள்ளனர். அப்போது அவரது உறவினர்கள், குமரேசனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய திட்டம் தீட்டியதோடு, இது தொடர்பாக கல்கத்தாவை சேர்ந்த ஒரு நபரிடம் துப்பாக்கி வாங்க தொலைபேசியில் பேசியுள்ளனர்.

இந்த தகவல் அறிந்த தேசிய புலனாய்வு முகமை, இது தொடர்பாக கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஈரோடை சேர்ந்த முகமது அலி ஜின்னா, திருச்சியைச் சேர்ந்த இம்ரான்கான், சதாம் உசேன், சென்னையைச் சேர்ந்த பக்ருதீன் மற்றும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ராம்வீர் அஜய் ஆகிய 5 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.

மேலும், துப்பாக்கி விற்பனையாளர்களுடன் இவர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்டுச்சதி, சாதி, மத, இனம் தொடர்பாக விரோத உணர்ச்சியைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சஹானாவின் தாய் நூர்நிஷா திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிரணி நிர்வாகியாக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...