கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளி கைது

கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பட்டணம் சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கிணத்துக்கடவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து அவர் கையில் வைத்திருந்த பையைச் சோதனை செய்த போது அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கடா என்பதும் இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக இருந்து கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து ரஞ்சன் கடாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...