கோவை ஆவாரம்பாளையம் அருகே மருத்துவ பொருட்களை ஏற்றி வந்த கண்டெய்னர் வேன் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

காலை 7 மணி முதல் ஆவாரம்பாளையம் பகுதியில் நின்றிருந்த வேனின் முன் பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.



கோவை: கோவை ஆவாரம்பாளையம் அருகே மருத்துவ பொருட்களுடன் வந்து சாலையில் நின்ற கண்டெய்னர் வேன் முன்பகுதியில் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

கர்நாடக மாநிலம் பதிவு எண் கொண்ட கண்டெய்னர் வேன் ஒன்று, டெல்லியில் இருந்து கோவைக்கு மருத்துவ பொருட்களுடன் வந்துள்ளது.

காலை 7 மணி முதல் ஆவாரம்பாளையம் பகுதியில் நின்றிருந்த நிலையில், சற்று முன் வேன் முன் பகுதி திடிரென தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.



தீ விபத்தில், கண்டெய்னர் வேன் முன் பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...