கோவையைச் சேர்ந்த தொழில் துறையினருக்கு புதிய பிரிட்டன் பப்புவா நியூ கினி நாட்டில் தொழில் செய்ய வாய்ப்பு - ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் தகவல்..!

புதிய பிரிட்டன் பப்புவா நியூ கினி நாட்டின் இந்தியாவுக்கான வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.



கோவை: கோவையைச் சேர்ந்த தொழில் துறையினருக்கு புதிய பிரிட்டன் பப்புவா நியூ கினி நாட்டில் தொழில் செய்ய வாய்ப்பு உள்ளதாக ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய பிரிட்டன் (மேற்கு) பப்புவா நியூ கினி நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல், கோவை தொழில் துறையினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி வடவள்ளியில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஆளுந‌ர் சசீந்திரன் முத்துவேல் பேசுகையில்,



"தங்கள் நாட்டில் பாமாயில், காப்பர், நிக்கல் சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளதாகக் கூறினார். குறிப்பாக, நல்ல இயற்கையான மண் வளம் உள்ள காரணத்தால் உரங்கள் எதுவும் பயன்படுத்தாமல் மிக அதிக அளவு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் தென்னை மரங்களில் பெறப்படும் இளநீர் அளவைவிட தங்கள் நாட்டில் நான்கு மடங்கு அளவு பெரிதாக இளநீர் இருப்பதாகக் கூறினார். நல்ல முறையில் இயற்கையான மண்வளம் தங்கள் நாட்டில் உள்ளதற்கு இதுவே சான்று எனவும் தெரிவித்தார்.

கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் தங்கள் நாட்டில் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், தொழில் துவங்குவதற்கான உரிமங்கள் அனைத்தும் ஆன்லைனில் மிக எளிய முறையில் வழங்கப்படும் என்றார். தங்கள் நாட்டுக்கு ஒருமுறை கோவையைச் சேர்ந்த தொழில்துறையினர் வருகை தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில்துறையினர் சிலர் கூறியதாவது:-



புதிய பிரிட்டன் (மேற்கு) பப்புவா நியூ கினி நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் அவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்நாட்டில் உணவு பதப்படுத்துதல், மரவேலைப்பாடுகள் மற்றும் வேளாண் உபகரணங்கள் தொழில் செய்ய கோவை தொழில் துறையினருக்கு நல்ல வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் கூட்டாக இணைந்து அந்நாட்டுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளோம்." என்றனர்.



இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் என்பது உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



புதிய பிரிட்டன் பப்புவா நியூ கினி நாட்டின் இந்தியாவுக்கான வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...