தில்லை நடராஜர் கோவிலை அரசுடைமையாக்க வேண்டும் - கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

சோழர் ஆட்சிக் காலத்தில் தமிழரால் கட்டப்பட்ட இந்த கோவில் இது வரை அரசு வசம் வராமல், தீட்சிதர்கள் வசமே உள்ளதால் அரசுடைமையாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.



கோவை: தில்லை நடராஜர் கோவிலை அரசுடைமையாக்கக் கோரி கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் தற்போதும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தில்லை நடராஜர் கோவிலுக்கு நுழைந்த தமிழ் பெண் ஒருவரை அங்கிருந்த தீட்சிதர்கள் வெளியே இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி, கடும் கண்டனங்கள் எழுந்தது.



இந்நிலையில், தில்லை நடராஜர் கோவிலை அரசுடமையாக்க கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அவ்வமைப்பினர் கூறுகையில்,

சோழர் ஆட்சிக் காலத்தில் குறிப்பாக தமிழரால் கட்டப்பட்டது இந்த கோவில், ஆனால், இது வரை அரசு வசம் வராமல், தீட்சிதர்கள் வசமே உள்ளது. அதே போல் அங்கு சென்ற தமிழ் பெண்ணை வெளியே இழுத்துச் சென்றது தொடர்பாக தீட்சிதர்கள் மீது எந்த வழக்குகள் பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.



மேலும், தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றி, சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலை அரசுடைமையாக்க வேண்டும் என கோரி கோசங்களை எழுப்பினர்.

அதே போல், ஜிஹாப் விவகாரத்தில் ஜிஹாப் அணிவது அவர்களது விருப்பம் அன்மையில் கர்நாடகாவில் தொடங்கிய பிரச்சனை ஓயவில்லை இதில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...