கோவையில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு தள்ளப்படுவதாக ஆட்டோ டிரைவர் கழுத்தில் தூக்குக்கயிறுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கந்துவட்டி கொடுமை மீது நடவடிக்கை எடுத்து பத்திரத்தை மீட்டுத் தரும்படி கேட்டு, மனைவி, 3 குழந்தைகள், பாட்டியுடன் வந்து மனு அளித்தார்.


கோவை: கோவையில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு தள்ளப்படுவதாக ஆட்டோ டிரைவர் குழந்தைகள், மனைவியுடன் கழுத்தில் தூக்கு கயிறுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவையில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பயிற்சி மாவட்ட ஆட்சியர் சரண்யா ராமச்சந்திரன் மனுக்களை வாங்கி அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது, கோவை ராமநாதபுரம், பஜனை கோவில் வீதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் ஆட்டோ டிரைவர்.



அவர் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு தனது 3 பெண் குழந்தைகளுடன் அவரது பாட்டி மற்றும் மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது பாட்டிக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்ட காரணமாக மருத்துவச் செலவுக்காக நான் என்னுடைய பாட்டி பத்திரத்தை கொடுத்து சுரேஷ் என்கிற சுரேந்திரனிடம் 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் கேட்டு இருந்தேன். இதற்கு மாத வட்டியாக 1,500 தருவதாக வாக்குறுதி அளித்துக் கொடுத்து வந்தேன்.

இதுவரை 85,000 ரூபாய் வட்டி செலுத்தி உள்ளேன். குடும்ப சூழ்நிலை மற்றும் கொரோனா காரணமாக தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் பத்திரத்தை அவரிடம் கேட்டபொழுது இன்னும் 8 லட்சத்து 25,000 ரூபாய் கொடுக்க வேண்டியது உள்ளது.

முழுமையாகக் கட்டினால்தான் உன் பாட்டியின் பத்திரம் கொடுக்க முடியும் என கூறியது மட்டுமல்லாமல், கொலை மிரட்டல் விடுத்து இப்படி வாழ்வதற்கு தற்கொலை செய்து கொண்டு சாகலாம் என கொச்சையாகப் பேசினார்.

இதன் பிறகு, கடந்த 23ம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தேன். ஆட்சியர் R.D.O வுக்கு அனுப்பி விட்டதாக கூறினார்.

அதன்பின் R.D.O.அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது எங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. கடந்த 3ம் தேதி ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். அந்த மனுவுக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை.

மேலும், கடைசியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நானும் எனது மனைவி, 3 பெண் குழந்தைகளும், எனது பாட்டியும் இந்த மனுவை தங்களிடம் அனுப்பியுள்ளோம். தயவு கூர்ந்து எங்களுக்கு நல்ல முடிவு கிடைக்க வழிவகை செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

கந்து வட்டியால் அநேக குடும்பங்கள் இறந்து கொண்டிருக்கின்றன. கந்துவட்டி கொடுமை மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பத்திரத்தை மீட்டுத் தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...