12 கல்லூரிகளை சார்ந்த 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இந்த திறன் மேம்பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை அரசு கல்லூரி முதலாம் ஆண்டு மாற்றுத்திறனாளி மாணவன் காலில் வரைந்த புலிகள் பாதுகாப்பு குறித்த ஓவியம் கண்போரை கவர்ந்துள்ளது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் உள்ள மென்திறன் மேம்பாட்டு அலகு சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களிடையே 5 நாட்கள் நடைபெறும் திறன் மேம்பாட்டுப் போட்டிகள் கோவை அரசு கலைக்கல்லூரியில் துவங்கியது.
ஆங்கில இலக்கியத்தை மையப்படுத்தி போட்டிகள் நடத்தப்படுகின்றன. முக ஓவியம், மீம்ஸ், ரங்கோலி, பேசன் ப்ரைடு என போட்டிகள் இந்த வாரம் முழுவதும் நடைபெறும்.
இதனிடையே, முதல் நாளான இன்று ஆங்கில இலக்கியத்தை மையப்படுத்தி (face painting) முக ஓவியம் போட்டி நடைபெற்றது.
இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஒவியங்கள் வரைந்துள்ளனர்.
அதில் கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு வரலாறு படிக்கக்கூடிய மாற்றுத்திறனாளி மாணவன் அக்பர் அலி காலில் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார். அவர் புலிகள் பாதுகாப்பு பற்றி வரைந்துள்ள ஓவியம் காண்போரைக் கவரும் வகையில் வரையப்பட்டுருந்தது.
இந்த நிகழ்ச்சியில், 12 கல்லூரிகளை சார்ந்த 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இயற்கையின் அத்தியாயம், புலிகள் பாதுகாப்பு, ஆதாம் ஏவால், அப்துல்காலம்னின் அக்னிச்சிறகுகள், பினிக்ஸ் போன்ற ஓவியங்கள் வரைந்து அசத்தினர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.