கோவையில் என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கி முழு சம்பளத்தை வழங்க கோரி பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

கடந்த 2 ஆண்டுகளாக பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதால் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.



கோவை: கோவையில் என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கி முழு சம்பளத்தை வழங்க கோரி பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கடந்த 2020ல் கொரோனா காரணமாக என்.டி.சி ஆலைகள் மூடப்பட்டது. அதனால் ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கி முழுமையான சம்பளத்தை தர கோரி பல்வேறு என்.டி.சி ஆலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் சுமார் 20க்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதையடுத்து, மனு அளிக்க வந்தவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.

கடந்த 2 ஆண்டுகளாக பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் சீர்குலைந்து உள்ளதாகவும், எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்கள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

இதன் காரணமாக, சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.



Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...