கோவையில் ஒரே நாளில் ரூ.33 லட்சம் வரி வசூல் - மாநகராட்சி அதிகாரிகள் தகவல்..!

இதற்கென 21 மாநகராட்சி வரி வசூல் மையங்கள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகின்றன.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 21 வரி வசூல் மையங்களில் நேற்று, 33 லட்சம் ரூபாய் வரியினங்கள் வசூலானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு நடப்பு, 2021-22ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்துக்கு, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, காலியிட வரி ஆகியவற்றை மக்கள் செலுத்தி வருகின்றனர்.

இதற்கென, 21 மாநகராட்சி வரி வசூல் மையங்கள் தினமும் காலை, 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மக்கள் உடனடியாக வரி செலுத்தும் வசதிக்காக நேற்று முதல் வரும், 31ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும், வரி வசூல் மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று 21 வரி வசூல் மையங்களிலும், 33 லட்சம் ரூபாய் வரி வசூலானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

'மாநகராட்சியில் இன்று (நேற்று) காலை 9.00 முதல் மாலை, 5.00 மணி வரை, சொத்து வரி, குடிநீர் வரி, காலியிட வரி என அனைத்து பிரிவிலும், 33 லட்சம் ரூபாயை பொதுமக்கள் செலுத்தியுள்ளனர். tnurbanepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இணையதள முகவரி வாயிலாகவும் வரி செலுத்தலாம்' என்றனர்.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...