கோவையில் குடும்ப தகராறில் கணவன் குத்தி கொலை - மனைவி காவல் நிலையத்தில் சரண்..!

கோவை சிங்காநல்லூர் அருகே குடும்பத் தகராறில் கணவரை வெட்டி கொலை செய்த மனைவி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே குடும்பத் தகராறில் கணவரை வெட்டி கொலை செய்த மனைவி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (55) தச்சு தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (50). இந்நிலையில் நாராயணசாமி வீட்டில் இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது, நாராயணசாமி மற்றும் அவரது மனைவி இடையே குடும்ப விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து வீட்டில் இருவரும் தனியாக இருந்தபோது, மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, நாராயணசாமி, ராஜேஸ்வரியை தாக்கியுள்ளார். இதனால்,ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி வீட்டில் இருந்த கத்தியால் நாராயணசாமியை குத்தியுள்ளார். இதில், படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து ராஜேஸ்வரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து, நடந்ததை தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...