கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆபத்தான நிலையிலிருந்த மேற்கூரை சீரமைப்பு பணி தீவிரம்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் முகப்பில் உள்ள மேற்கூரை பழுதடைந்து மோசமாக இருந்தது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் இடம் என்பதால் மேற்கூரையைச் சீரமைக்கும் பணியைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டபட்டது.


கோவை: ‌கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் ஆபத்தான நிலையிலிருந்த மேற்கூரையை இடித்துச் சீரமைக்கும் பணிகள் துவக்கி உள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பழைய கட்டிடத்தில் உள்ள மூன்று தளங்களில், சமூகநலத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, குழந்தைகள் நலத்துறை, இ சேவை மையம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், ஆவண காப்பகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்தில் அண்மையில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாகக் கட்டிடத்தின் முகப்பில் உள்ள மேற்கூரை பழுதடைந்து மோசமாக இருந்தது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் இடம் என்பதால் மேற்கூரையைச் சீரமைக்கும் பணியைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டபட்டது.

இந்த நிலையில் அங்கு ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது, மேற்கூரை மிகவும் வலுவிழந்த நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேற்கூரையின் ஒரு பகுதியில் இடித்த போது,திடீரென மேற்கூரையில் ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் இடிந்து கீழே விழுந்தது.

இதையடுத்து பணியில் இருத்த ஊழியர்கள் விலகி நின்றவாறு சிமெண்டு காரைகளை அகற்றினார். அதே போல் மேற்கூரைக்குத் தூண்கள் இல்லாமல் இருக்கும் நிலையில், கம்பிகளும் மோசமாகவே காட்சியளிக்கிறது. இதனால் உரிய பாதுகாப்புடன் மேற்கூரையை அகற்றி, விரைந்து சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...