கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த கோரிக்கை விடுப்பதாக தீர்மானம்..!

கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய போர், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் இருதரப்பு இராணுவமும், இராணுவ வீரர்களும் பாதிக்கப்படுவதால் போரை நிறுத்த கோரிக்கை.


கோவை: கோவையில் உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த கோரிக்கை விடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், புதிய தமிழகம் கட்சியின் சார்பில் களம் கண்ட 65 வேட்பாளர்களையும், அதில் வெற்றி பெற்ற 7 வேட்பாளர்களையும், வாழ்த்தும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் உயர்மட்ட குழு சார்பாக பாராட்டு விழா கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடைபெறுவதாக தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பண பலம், அதிகார பலம், கூட்டணி பலத்தைத் தாண்டி, மக்கள் செல்வாக்கை நம்பி புதிய தமிழகம் கட்சி போட்டியிட்டதாகவும், அதில் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம் என்றும், வெற்றி பெற்ற 7 பேருக்கும், போட்டியிட்ட 65 பேருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே, கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய போர், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் இருதரப்பு இராணுவமும், இராணுவ வீரர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும், எனவே இந்த போரை நிறுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரவித்தார்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...