உடுமலையில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் முகநூலில் பதிவேற்றம் செய்த நபர் கைது..!

இவர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உடுமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலையில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் முகநூலில் பதிவேற்றம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சசாங் சாய் கூறியிருப்பதாவது:-

உடுமலையை அடுத்த கணியூர் அக்ரஹாரம் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (எ) பாலாஜி(50). வெங்கிட்டாபுரம் காளியம்மன் கோயில் பூசாரியான இவர், தனது முகநூல் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்திருப்பதாக என்சிஎம்இசி சைபர் டைப்லைன் என்ற பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பினர் புகார் அளித்திருந்தனர்.

இதையடுத்து, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடுமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...