கோவையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது..!

மேலும், அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கழிப்பறை அருகே சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து, காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த சரவணம்பட்டியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (23), என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேபோல, கோவை சரவணம்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் வழியாக போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த சிவபிரசாந்த் (22) என்பவரை கைது செய்தனர்.

இதையடுத்து, அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...